இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,612 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In TamilNadu 30 09 2021
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,612 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் கொரோனோ தொற்றிற்கு 28 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,578 ஆக உயர்ந்துள்ளது.
இது போக இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,626 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 4.69 கோடியாக உயர்ந்துள்ளது. தானாக முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் பெரிதாக உயர்ந்துள்ளது.
“ கொரோனோ தடுப்பு செயல்பாடுகளை பொறுத்தவரை தமிழகம் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இந்த அக்டோபர் முடிவதற்குள் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவதை இலக்காக வைத்து இயங்கி வருகிறது தமிழக சுகாதார துறை அமைச்சகம் “