உயர்ந்து வரும் உலகளாவிய கொரோனோ தொற்று!
Corono Updates In World 22 09 2021
2019-இல் ஆரம்பித்த கொரோனோ அலை இன்றளவும் ஓயாத நிலையில், உலகளாவிய அளவில் மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது கொரோனோ தொற்று!
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் உலகளாவிய அளவில் 3,87,435 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் உலகளாவிய அளவில் 7,324 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த உலகளாவிய கொரோனோ பலி எண்ணிக்கை 47 லட்சத்தை கடந்துள்ளது.
“ வளர்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளே கொரோனோவிற்கு எதிராக திறம்பட செய்ல்படாத சூழலில், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட தேசம் இன்றளவும் சரியான முறையில் கொரோனோவை கையாள்வதை மிகவும் பாராட்டியே ஆக வேண்டும் “