கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,591 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Covid Updates In TamilNadu 14 09 2021
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,591 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 27 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,217-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து 1,537 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
புதியதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உருமாறிய கொரோனோ மூன்றாவது அலையை எப்போது வேண்டுமானாலும் தேசத்தில் தொடக்கி விடலாம். வயது ஒன்று முதல் பத்து வரை இருக்கும் குழந்தைகளை மூன்றாவது அலை பெரிதும் தாக்க இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி திறப்பு குறித்து வேறு ஆலோசித்து வரும் தமிழக அரசின் இந்த செயல்பாடுகள் மட்டும் முரண்பாடாகவே உள்ளது.
“ நாமே தேடி பெறுகிறோம், நாமே பரப்புகிறோம், நாமே இழக்கிறோம், நாமே துன்பங்களையும் அடைகிறோம், இந்த கொரோனோ என்னும் பேரிடருக்கு நாம் எனப்படும் நாம் மட்டுமே தான் மூலதன காரணம், இதை உணர்ந்து சமூக பொறுப்புடன் செயல்பட்டாலே இந்த கொரோனோ என்னும் பரவலை முறியடிக்க முடியும் “