தேசத்தில் 92 கோடியைத் தொட்டிருக்கும் தடுப்பூசி உபயோகம்!
ஒட்டு மொத்த தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 92 கோடியைத் தொட்டு இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.
இந்தியா முழுக்க செயல்படுத்தப்பட்ட தீவிரமான தடுப்பூசி செயல்பாடுகளின் விளைவாக ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 92 கோடியைக் கடந்து இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 68.88 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். தற்போது நிலவரப்படி 51 சதவிகிதம் பேர் தேசத்தில் குறைந்த பட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொண்டுள்ளனர்.
133 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் திறம்படவே தடுப்பூசி செயல்பாடுகளை அனுசரித்து வருகிறது நம் மத்திய அரசுகளும் மாநில அரசுகளும். 94 கோடி இளைஞர்களை கொண்ட நம் தேசத்தில் தோராயமாக 68 கோடிக்கும் மேலான இளைஞர்கள் குறைந்தபட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
“ சீக்கிரமே தடுப்பூசி உபயோகம் 100 சதவிகிதம் என்ற அதிகபட்ச அளவை எட்டும், அப்போது இந்தியாவில் தொற்றினால் உண்டாகும் இறப்பின் விகிதம் ஜீரோ என்ற விகிதத்தை அடையும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது “