முதியவர்களுக்கு வீடு தேடிவரும் தடுப்பூசி – சென்னை மாநகராட்சி
80 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் விருப்பப்படின் அவர்களுக்கு வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் பகுதிகளில் வசிக்கும் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆசைப்பட்டால் வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவர்கள் முறையாக 044-25384520 மற்றும் 044-46122300 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை சென்னை கோவை என்று மாறி மாறி அந்த மாநகராட்சிகளில் கொரோனோ பாதிப்புகள் முதல் இரண்டு இடங்களை பெற்று வரும் நிலையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நடக்க முடியாத சூழலில் உள்ள மூத்த குடிமக்கள் தங்கள் உயிரைக்காக்கும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள அருகாமையில் உள்ள தடுப்பூசி மையங்களை அணுக முடியாத நிலை இருக்கும் சமயத்தில் வீடு தேடி வரும் தடுப்பூசி என்ற திட்டத்தை செயல்படுத்த இருக்கும் சென்னை மாநகராட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
“ தடுப்பூசி என்பது உணவைப்போல அத்தியாவசியம் ஆகியிருக்கும் நிலையில் அதை மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி சென்றடையும் வகையில் செய்திருக்கும் இத்திட்டம் தமிழகம் முழுக்க செயல்படுத்த முயற்சி செய்தால் இன்னமும் நன்மை சேர்க்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து “