135 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ – உலக சுகாதார அமைப்பு

கொரோனோ என்னும் நுண்கிருமியுடன் எப்படி போராடுவது என்று உலகமே விழி பிதுங்கி நிற்கும் இந்த சமயத்தில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ உலகெங்கும் பெருக்க தொடங்கி உள்ளது. இது வரை 135 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ பரவத் தொடங்கி விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை விடுத்துள்ள நிலையில் அடுத்து என்ன செய்வதென்றே அறியாமல் குழம்பி நிற்கிறது உலக நாடுகள்.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனோவிற்கு எதிராக தடுப்பூசி கொள்கையை நம்பி இருக்கும் போது கொரோனோவோ அந்த தடுப்பூசிக்கு எதிராக தன்னை தொடர்ந்து உருமாற்றிக்கொண்டே இருக்கிறது. இரண்டு தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் மறுபடியும் ஏற்படும் கொரோனோ தொற்று தான் இதில் வேடிக்கையாக உள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என்று தொடந்து உருமாறிக்கொண்டிருக்கும் இந்த உருமாறிய கொரோனோவிற்கு எதிராக அடுத்தும் தடுப்பூசி ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது ஒரு சில நாடுகள்.

” இன்னும் இந்த தொற்றின் வீரியம் முடிந்து விடவில்லை, முடிந்த வரை பாதுகாப்பாக இருங்கள், முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், வதந்திகளை நம்பாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் “ 

About Author