தனித்தீவிற்குள் 18 பேரின் வாழ்விற்கான போராட்டம் – சர்வைவர் பற்றி ருசிகர தகவல்கள்
உலகளவில் புகழ்பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோ-வாக கருதப்படும் சர்வைவர் எனப்படும் நிகழ்ச்சியை தமிழ் வடிவில் ஒரு சில போட்டியாளர்களையும் தேர்ந்தெடுத்து, ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் வரும் செப்டம்பர் 12 முதல் ஒளிபரப்ப உள்ளதாக தொடர்ந்து விளம்பரப்படுத்தி வந்தன. அதற்காக நடிகர் அர்ஜூனும் அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இது அந்த ஷோவின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியது.
18 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு தனித்தீவில் களம் இறக்கப்படுபவர். அவர்கள் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் போட்டியின் போது கொடுக்கப்படும் சவால்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். யாவினையும் எதிர்கொண்டு யார் கடைசி வரை களத்தில் நிற்கிறார்களோ அவர்களே சர்வைவர்-ஆக கருதப்பட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.
தமிழில் முதல்முறையாக ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் நடிகர் அர்ஜூன் தொகுப்பாளராகவும், மேலும் போட்டியாளர்களாக நடிகர்கள் விக்ராந்த், நந்தா, பெசண்ட் ரவி, உமாபதி ராமைய்யா மற்றும் நடிகைகள் விஜே பார்வதி. காயத்ரி ரெட்டி, சிருஷ்டி டாங்கே, விஜய லெட்சுமி ஆகியோர் களமிறங்க உள்ளனர். இவர்கள் தவிர போட்டியில் களமிறங்கும் மீதி 10 பேரின் பெயர் மட்டும் தொலைக்காட்சி நிறுவனத்தால் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.
“ போட்டி நிறைந்த டெலிவிசன் உலகத்தில் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து தமிழ் வடிவம் பெற்று வரும் வரிசையில் பிக்பாஸ் ஏற்கனவே வென்றுவிட்ட நிலையில் அதற்கு போட்டியாக களம் இறங்கி இருக்கும் சர்வைவரும் வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம் “