தனுஷ் – ஐஸ்வர்யா அதிர்ச்சி விவாகரத்து! என்ன நடந்தது?
நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யாவை மணந்தார். 18 வருடங்கள் கழித்து, தற்போது அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிருக்கிறது.
அந்த அறிக்கையில் 18 வருடங்கள் நல்ல நண்பர்களாக ஜோடியாக பெற்றோராக ஒருவருக்கொருவர் நல்லதை விரும்பியவர்கள் ஆக இருந்தோம். ஆனால், தற்போது எங்கள் தனித்தனி பாதையில் செல்லலாம் என முடிவு எடுத்திருக்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் ஒருவரை ஒருவர் பிரிகிறோம் என கூறியிருக்கிறார். இது அவர்களது தனிப்பட்ட முடிவு எனவும், அவர்களுடைய முடிவை அனைவரும் மதிக்கும் மாறும் கேட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சி முடிவு பல அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் இதுபோல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் விவாகரத்து பெற்றார்கள். அதுவும் பல அதிர்வலைகளை உருவாக்கியது.