தமிழ் மக்களிடம் முழுமனதாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் – தன்யா

Dhanya Balakrishnan Sincere Apology To Tamils Idamporul

Dhanya Balakrishnan Sincere Apology To Tamils Idamporul

’லால் சலாம்’ கதாநாயகி தன்யா, தமிழ் மக்களிடம் முழுமனதாக மன்னிப்புக் கேட்டு சமூக வலைதளங்களில் ஒரு பதிவை இட்டு இருக்கிறார், எதற்காக ஏன்? என்பதை பார்க்கலாம்.

சில தினங்களுக்கு முன்பு தமிழர்களை, நடிகை தன்யா இழிவாக பேசியதாக கூறி ஒரு பதிவின் ஸ்கீரின் ஷாட் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருந்தது. லால் சலாம் படத்தின் கதாநாயகியாக தன்யா நடித்து இருப்பதால், அந்த ஸ்கீரின் ஷாட் படத்திற்கும் சிக்கலை கொடுத்தது. இந்த நிலையில் தன்யா தாமாக முன் வந்து தமிழ் மக்களிடம் முழுமனதாக மன்னிப்பை கேட்டு ஒரு அறிக்கை விடுத்து இருக்கிறார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது, ’அந்த பதிவு தான் இட்டது இல்லை, யாரோ ஒருவர் உருவாக்கிய போலியான ஸ்கீரின் ஷாட் தான் அது. அந்த சமயத்தில் அது போலி என நிரூபிக்கும் சக்தி எனக்கு இல்லை. தமிழில் தான் என் சினிமா வாழ்க்கையை துவங்கியது. துரதிர்ஸ்டவசமாக என் பெயர் இதில் அடிபட்டு விட்டதால் தமிழ் மக்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.


“ தமிழர்கள் என்றாலே மன்னிக்க தெரிந்தவர்கள் தான், நிச்சயம் இந்த மன்னிப்பை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை “

About Author