ஊழல் அதிகரித்து விட்டதாக அறிக்கை விடுத்து இருக்கும் விஜய் கொஞ்சம் தன்னையும் கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டும்!
ஊழல் அதிகரித்து விட்டதாக அறிக்கை விடுத்து இருக்கும் நடிகர் விஜய், கொஞ்சம் தன்னையும் கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டும் என நடிகர் விஜய் அவர்களின் கட்சி அறிவிப்பு அறிக்கை குறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
ஒரு தமிழனாக மதவாதம், சாதிகளுக்கு அப்பாற்பட்டு விஜய் ஒரு அரசியல் துவங்குவதை ஆதரிக்கிறேன். ஆனால் ஊழல் அதிகரித்து விட்டதாக் அறிக்கை விடுத்து இருக்கும் அதே விஜய், புலி படத்தின் போது சம்பளத்தில் 5 கோடியை மறைத்தது ஏன், 5 வருடங்களாக வரிக்கணக்கை சரிவர காட்டாதது ஏன், வெளிநாட்டில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்துவிட்டு, ரிஜிஸ்டர் செய்ய வரி அதிகமாக கேட்டதும் ரிஜிஸ்டர் கூட செய்யாமல் வீட்டிற்குள்ளேயே காரை பூட்டி வைத்தது ஏன்?
ஏழைகளுக்கு சேர வேண்டிய வரியை ஏய்ப்பு செய்வதும் ஒரு வகையில் ஊழல் தான். உலகை மாற்ற நினைப்பவர்கள் முதலில் தங்களை மக்களுக்கு ஒரு உதாரணமாக எடுத்துச் செல்ல வேண்டும். அவர் அரசியலில் நல்லது செய்தால் நல்லது தான், ஆனாலும் இதையெல்லாம் அவருக்கு நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என அமீர் கூறி இருக்கிறார்.
“ அமீரின் கேள்வியும் ஒரு வகையில் நியாயம் தான், ஊழலை தன்னில் இருந்தே ஒழிக்காதவர்கள் எப்படி, ஒரு தேசத்தில் ஒழிக்க முடியும் என பல இணையவாசிகளும் நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் “