முத்தையா படத்தில் அறிமுக நாயகியாக களம் இறங்கும் இயக்குநர் சங்கரின் மகள் அதிதீ சங்கர்!

பிரம்மாண்டத்தின் உச்சமாக அறியப்படும் இயக்குநர் சங்கர் அவர்கள், தெலுங்கு பட உலகிற்கு ராம் சரண்னுடன் இணைந்து அறிமுகமாக இருக்கும் அதே நிலையில், அவரது மகள் அதிதீ சங்கர், இயக்குநர் முத்தையா, கார்த்தி மற்றும் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா என்று பெரிய பட்டாளங்கள் இணையும் விருமன் படத்தில் அறிமுக கதாநாயகியாக இணைய இருக்கிறார்.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்க இருக்கும் நிலையில் ,நடிகர் சூர்யா சிவக்குமார் தனது ட்விட்டர் வலை தளத்தில் படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். அதில் அவர், ’தமிழ் சினிமாவிற்கு அதீதி சங்கர் ஆகிய உங்களை அன்புடன் வரவேற்கிறோம். விரைவிலேயே நீங்கள் அனைவரின் இதயத்தையும் எளிதாக வெல்வீர்கள் என்று நம்பிக்கை கொள்கிறேன். உங்கள் வரவு நல்வரவு ஆகுக’ என்று ட்வீட் செய்துள்ளார்.

” எதிர்பார்ப்போம் இயக்குநர் சங்கர் பட உலகில் கலக்கும் அளவுக்கு அவரின் மகள் அதீதி சங்கரும் கலக்குவாரா என்று எதிர்பார்ப்போம் “

About Author