’டாக்டர்’ திரைப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் Glimpse இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் Glimpse இணையத்தில் வெளியாகி உள்ளது.
“ தெலுங்கு பாடல் ’புட்ட பொம்மா’ பாடலைப்போல கலர்புல்லாக காட்சியமைக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். பாடல் + காட்சியமைப்பு + நடனம் + எக்ஸ்பிரசன் என்று எல்லாவற்றிலும் பாடல் கலக்குகிறது “