ஆர்யா-விஷால் நடிக்கும் ‘எனிமி’ படத்தின் ‘லிட்டில் இந்தியா’ பாடல் இணையத்தில் வெளியானது!
Enemy Movie Little India Song Released In Net
ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் எனிமி படத்தின் ‘லிட்டில் இந்தியா’ எனப்படும் பாடல் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ் ராஜ், மிர்னாளினி ரவி, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் ‘எனிமி’ திரைப்படத்தின் ‘லிட்டில் இந்தியா’ எனப்படும் பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமன் இசையமைத்திருக்கும் இந்த பாடலை அறிவு அவர்கள் எழுதி பாடியும் உள்ளார்.
“ சார்பட்டா பரம்பரையும், சண்டக்கோழி பரம்பரையும் இணைந்து நடிக்கின்ற படம் என்பதால் இந்த படத்திற்கு ஹைப் அதிகம் என்றே திரையுலகினர் கூறி வருகின்றனர். படமாக எப்படி உருவாகி இருக்கிறது பொறுத்திருந்து பார்க்கலாம். இப்பாடலை பொறுத்தவரை மற்றுமொரு தற்போதைய ட்விட்டர் ட்ரென்டிங் அவ்வளவு தான் “