நடிகர் விஜய் மற்றும் அஜித் அவர்களுக்கு எதிராக ட்ரென்ட் ஆகும் நெகட்டிவ் ஹேஸ்டாக்குகள்!
Negative Hashtags Against Vijay And Ajith
நடிகர் விஜய் மற்றும் அஜித் அவர்கள் குறித்து அவதூறான ஹேஸ்டாக்குகளை மாறி மாறி இரு ரசிகர்களும் சமூக வலைதளங்களிலும் ட்ரென்ட் செய்து வருகின்றனர்
சமீப காலமாகவே நெகட்டிவ் டாக்குகளை ட்ரென்ட் செய்வது என்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிகரித்து வருகிறது. மாறி மாறி அசிங்கப்படுத்துவதாக நினைத்து கோலிவுட் வட்டாரத்தை உலக அரங்கில் அசிங்கப்படுத்தி வருகின்றனர். ட்ரென்ட் என்பது பாசிட்டிவ்வாக இருக்கும் பட்சத்தில் வரவேற்கலாம். இது நிச்சயம் அருவருக்கத்தக்கதே. நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் உங்களின் ஆத்ம நடிகர் இதை நிச்சயம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்க மாட்டார்.
” ‘வாழு வாழ விடு’ , ‘நதி போல ஓடிக்கொண்டிரு, உன் மீது கல்லெறிபவர்களையும் கூட கண்டு கொள்ளாமல் கடந்து சென்று கொண்டே இரு’ என்று கூறிய இரு பெரும் நடிகர்களை, ரசிகர்களாகிய நீங்களே அசிங்கப்படுத்துகிறீர்கள் என்பது தான் ஆகச் சிறந்ததோர் உண்மை ”