இரண்டு சிகரங்களை சிங்க வேகத்தில் ஏறி சாதனை படைத்த சி ஐ எஸ் எப் பெண்மணி!
மத்திய தொழிற் பாதுகாப்பு பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் கீதா சமோதா, ரஷ்யாவில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ ஆகிய இரண்டு மாபெரும் சிகரங்களின் உச்சியை மிகக்குறுகிய கால இடைவெளியில் அடைந்து சாதனை படைத்துள்ளார்.
ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமாக கருதப்படும், ரஷ்யாவில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ் (5,642 மீ/18,510 அடி) என்னும் சிகரத்தை முதலில் அடைந்திருந்த கீதா சமோதா, அதற்கு பின் ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமாக கருதப்படும் கிளிமாஞ்சாரோவின் (5,895 மீ/19,341 அடி) உச்சியை நேற்றைய தினமான சனிக்கிழமை அன்று அடைந்திருந்தார். இதன் மூலம் மிகக்குறுகிய காலத்தில் இரண்டு பெரும் சிகரங்களின் உச்சியை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார் கீதா சமோதா.
” உண்மையாக உழைத்துப் போராடு, சிகரத்தை அடைவாய் என்பது பழமொழி. ஆனால் இங்கு இரண்டு சிகரத்தை அடைவதற்கு மிகவும் போராடி அதில் சாதனையும் படைத்துள்ள இந்த சிங்கப்பெண்மணியை வாழ்த்த வார்த்தைகள் இல்லை, மென்மேலும் புகழின் உயரத்திற்கு செல்லுங்கள் கீதா சமோதா “