கூகிள் மென்பொருள் நிறுவனத்துக்கு இன்றோடு வயது 23!
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் ஆன, கூகிள் நிறுவனத்திற்கு இன்று 23 ஆவது பிறந்த நாள். 1998 ஆம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் என்ற இருவர்களால் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இன்று உலகம் முழுக்க அதிகமாய் உபயோகிக்கும் தேடுதல் பொறியாக வளர்ந்து நிற்கிறது கூகிள்.
ஓரு நாளில் மட்டும் உலகம் முழுக்க உள்ள 150 மொழிகளில், கூகிளில் 1 பில்லியனுக்கும் மேலான தேடுதல்கள் பதிவு செய்யப்படுகிறது. மேலும் கூகிள் நிறுவனம், உலகம் முழுக்க 20-க்கும் மேற்பட்ட தகவல் சேமிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கூகிள் நிறுவனத்திற்கு தலைமை நிறுவனராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை என்பதும் பெருமைக்குரியது.
” தேடுவதை எல்லாம் வரம் போல தருகின்ற ’மென்பொருள் கடவுள்’ என்று கூட இன்றைய கூகிளைச் சொல்லி விடலாம். அத்தகைய மென்பொருள் கடவுளுக்கு 23 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் “