இனி கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – தமிழக அரசு
Goon Act Punishment Against Counterfeit Liquor Vendors Idamporul
இனி கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து இருக்கிறது.
கள்ளச்சாராயம் குடித்து கடந்த 10 நாட்களுக்குள் மட்டும் 22 பேர் பலியானதை அடுத்து தமிழக அரசு தனிப்படை அமைத்து தமிழகம் முழுக்க கள்ளச்சாராயம் விற்பவர்களை வலை வீசி தேடி வருகிறது. இது போக இனி கள்ளச்சாராயம் விற்றால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் தமிழக அரசு எச்சரித்து இருக்கிறது.
“ தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கள்ளசாராயம் இறப்பு குறித்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது “