லோன் செயலிகள் மூலம் திருடப்படும் வாடிக்கையாளர்களின் பெர்சனல் தகவல்கள்!
Increasing Cyber Crime Frauds In India
அவசர தேவைக்கென நிறுவப்படும் செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் தகவல்கள் திருடப்படுப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஓருவர் அவசர தேவைக்கென லோன் செயலிகள் மூலம் பணத்தைப் பெறும் போது அவரின் ஆதார், பேன் நம்பர் உள்ளிட்ட தகவல் திருடப்படுவது மட்டும் இல்லாமல், அவரது பெர்சனல் தகவல்களையும் பதிவிறக்கம் செய்து அதை வைத்து மிரட்டி மேலும் பணத்தை பறிக்கும் சைபர் கொள்ளையர்கள் பெருகிவருவதாக காவல்துறை மக்களை எச்சரித்து இருக்கிறது.
ரம்மி, ஆன்லைன் கேம்கள், லோன் செயலிகள் என்று ஆசை உணர்வுகளை தூண்டும் செயலிகளால் இன்று பலரும் தற்கொலை என்ற நிலைக்கு செல்லும் அளவுக்கு தள்ளப்படுகின்றனர். மொபைல் என்பதை தகவல் தொடர்புக்கு மட்டும் பயன்படுத்தினால் எந்த பாதிப்பும் இல்லை.
“ செயலிகளை ஆசைகளுக்கும், அவசரங்களுக்கும் உபயோகித்தால் நாளை நம் கழுத்தையும் அது நிச்சயம் நெறிக்கும் என்பதில் ஐயமில்லை “