இந்திய பெருங்கடல் எல்லைக்குள் ராஜாவாக அடியெடுத்து வைக்கும் ஐ என் எஸ் துருவ்!
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு கப்பலான ஐ என் எஸ் துருவ் இன்றிலிருந்து இந்திய பெருங்கடல் என்னும் ஆட்சிப்பகுதிக்குள் ராஜாவாக களம் இறங்க இருக்கிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (NTRO) மற்றும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு லிமிட்டடு இணைந்து முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரித்து இருக்கும் கண்காணிப்பு கப்பல் தான் ஐ என் எஸ் துருவ். இந்த கப்பலின் மூலம் இந்தியப்பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைகோள்கள் மற்றும் இந்தியாவை நோக்கி வருகின்ற எதிரிநாட்டு ஏவுகணைகளையும் அதன் தன்மைகளையும் எளிதில் அடையாளம் காண முடியும்.
இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன மின்னனு ரேடார்களின் மூலம் நம்மை உளவு பார்க்கும் அந்நிய செயல்பாடுகளையும், எதிரிகளின் எதிர்பாராத தாக்குதல்களையும் துல்லியமாக முன்னதாகவே அறிய முடியும். எத்தனையோ தேச பாதுகாப்பு கப்பல்களை இந்திய கப்பற்படை பெருங்கடலுக்குள் நிறுவி இருந்தாலும் இந்த கப்பல் அதற்கெல்லாம் ராஜாவாக நின்று நம் தேசத்தை காக்கும் பணியில் ஈடுபடும் என்பதி ஐயமில்லை.
“ அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பிறகு தன் நாட்டிற்கென்று தனியாக ஒரு கண்காணிப்பு கப்பலை பெருங்கடலில் நிறுவியிருக்கும் ஆறாவது நாடு என்ற பெருமையை பெறுகிறது இந்தியா “