ஒரே நாளில் இரண்டு கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகம் செய்து இந்தியா புதிய சாதனை!
India Set A New Record By A 2 Crore Vaccination In A Single day
இந்தியாவில், இன்று ஒரே நாளில் மக்களுக்கு 2 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்து புதிய சாதனை இயற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, இன்று ஒரே நாளில் 2 கோடி தடுப்பூசிகள் மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 78 கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.
” 133 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை இருக்கும் ஒரு நாட்டில், நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை தாமே தங்களது நாட்டில் தயாரித்து, அதை மக்களுக்கு தகுந்த முறையில் விநியோகம் செய்வதில் மற்ற நாடுகளைக்காட்டிலும் சிறந்து விளங்கும் நம் தேசத்தின் செயல்பாடுகளை, எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இன்றி நிச்சயம் ஒன்றிணைந்து பாராட்டியே ஆக வேண்டும் “