உலகிலேயே அதிக தடுப்பூசி மக்களுக்கு விநியோகம் செய்த நாடுகளில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்!
நேற்றைய தினம் வரை இந்தியாவில் இது வரை 55.73 கோடி தடுப்பூசிகள் ஒன்றிய அரசிடம் இருந்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 53.26 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. மக்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்திய நாடுகளுள் சீனாவிற்கு அடுத்து இந்தியா இருப்பதாகவும் தனது அறிக்கையில் அமைச்சகம் அறிவித்துள்ளது.
பயன்படுத்திய 53.26 கோடி தடுப்பூசிகள் போக மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 2.85 கோடி தடுப்பூசிகள் வசம் இருப்பதாகவும் மேலும் கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தக்க சமயத்தில் அனுப்பி வைக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை தேவைக்கு அதிகமாகவே தடுப்பூசிகள் இருப்பதாகவும் அது குறித்து யாரும் கவலை கொள்ள தேவையில்லை எனவும் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
” அந்த நுண்கிருமியை எதிர்கொள்ள உதவும் ஒரு சிறிய தடுப்பாற்றல் தான் இந்த தடுப்பூசி முடிந்தவரை அனைவரும் செலுத்திக்கொள்ளுங்கள். சமூக நலனுடன் – இடம்பொருள் “