ஒரு சதவிகிதம் பணக்காரர்களிடம் குவிந்து கிடக்கும் இந்தியாவின் 40 சதவிகித சொத்துக்கள்!
இந்தியாவின் ஒரு சதவிகிதம் பணக்காரர்களிடம், ஒட்டு மொத்த இந்தியாவின் 40 சதவிகிதம் சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பணக்காரன் இன்னும் பணக்காரனவே தான் இருக்கான், ஏழை இன்னும் ஏழையா போயிட்டே தான் இருக்கான் என்ற சிவாஜி படத்தின் டையலாக் உண்மை தான் போல. ஒட்டு மொத்த இந்தியாவின் 40 சதவிகித சொத்துக்கள், இந்தியாவின் ஒரு சதவிகித பணக்காரர்களிடம் தேங்கி இருப்பதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது.
இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்தியாவில் இருக்கும் 10 சதவிகித பணக்காரர்களிடம் இருந்து இந்தியாவிற்கு கிடைக்கும் ஜிஎஸ்டி வருமானம் வெறும் மூன்று சதவிகிதம், அடித்தள மக்களான 50 சதவிகிதம் பேரிடம் இருந்து கிடைக்கும் ஜிஎஸ்டி வருமானம் 64 சதவிகிதம்.
” ஒட்டு மொத்தமாக யோசித்து பார்த்தால், பணக்காரர்கள் ஏழைகளை பயன்படுத்துக் கொண்டு அவர்களையும் அவர்களது வாழ்வியலையும் கட்டமைத்துக் கொள்கிறார்கள். அடித்தள மக்களிடம் வரிகளை பிடுங்கி தேசம், இந்தியாவை கட்டமைத்துக் கொண்டு இருக்கிறது “