18 ஒடிடி தளங்கள் அமைச்சகத்தால் முடக்கம், காரணம் என்ன?
18 ஓடிடி தளங்கள் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து செயல்படுவதாக கூறி தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அதனை முடக்கி இருக்கிறது.
தொடர்ந்து ஆபாச படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வந்த 18 ஓடிடி தளங்கள், 19 இணையதளங்கள், 10 செயலிகள் மற்றும் அதைச் சார்ந்து செயல்பட்டு வந்த 56 சமூக வலைதளங்களை முடக்கி இருப்பதாக இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
தடை செய்யப்பட்ட அந்த 18 ஓடிடி வலைதளங்கள்:
Dreams Films | Voovi | Yessma | Uncut Adda | Tri Flicks | X Prime |
Neon X VIP | Besharams | Hunters | Rabbit | Xtramood | Nuefliks |
MoodX | Mojflix | Hot Shots VIP | Fugi | Chikooflix | Prime Play |
” இது போக இந்தியாவில் முதன்மையானதாக செயல்பட்டு வரும் ஓடிடி வலைதளங்களும் இந்திய அரசின் விதிமுறைகளை சரிவர பின்பற்றாதது கண்டு பிடிக்கப்பட்டால் அதையும் நீக்குவதற்கு தயங்க மாட்டோம் என அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது “