எளியோர்களின் கழுத்தை நெறிக்கும்படி அமைகிறதா ஜி.எஸ்.டி வரி விதிப்பு?
அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு வரி விதிப்பு என்பது எளியோர்களின் கழுத்தை நெறிக்கும்படி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
அரிசி, பருப்பு உட்பட்ட வணிக முத்திரையற்ற அத்தியாவசிய பொருள்களுக்கும் இனி ஐந்து சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவித்திருப்பது ஏழை எளிய மக்களின் வறுமையில் அரசும் அவர்களிடம் கழுத்தை நெறித்து பிடுங்குவதாய் அமைவதாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“ வாழ்க்கையே சுமையாக இருப்பவர்களுக்கு வரி என்னும் சுமையையும் சேர்த்து கொடுப்பது தான் ஒரு நல்ல அரசின் நோக்கமா என்பது பலரின் கருத்தாக இருக்கிறது “