இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப் பட்டவர்களுள் 51% பேர் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்!
51 Of India Omicron Patients Received Both Doses Of Covid Vaccine
ஒமிக்ரானால் பாதிப்புக்கு உள்ளானவர்களில் கிட்ட தட்ட 51 சதவிகிதம் பேர் முழுமையாக இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 183 பேரை பரிசோதித்த போது, அவர்களில் 51 சதவிகிதம் பேர் முறையாக இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாகவும், மேலும் அவர்களில் மூன்று பேர் பூஸ்டர் டோஸ்சும் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல்களின் மூலம் தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக பயன் தருமா என்ற அச்சம் நிலவி உள்ளது.
“ தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களையும் அச்சுருத்தி வரும் ஒமிக்ரானால், என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்து நிற்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள் “