மூன்றாவது நாளாக இழுபறியில் நீடிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம்!
நேற்று மூன்றாவது நாள் ஏலம் முடிவடைந்த நிலையில் இன்னமும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இழுபறியில் தான் சென்று கொண்டு இருக்கிறது.
4ஜியை விட 10 மடங்கு அதிக வேகம் கொண்ட 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஏர்டெல், வோடபோன்,ஜியோ, அதானி நிறுவனம் பங்கேற்றிருக்கும் நிலையில் ஏலம் மூன்றாவது நாளாக தொடர்ந்து இழுபறியில் இருக்கிறது. முந்தைய தினம் 1,49,454 கோடி ஆக இருந்த ஏலம் நேற்று 16 சுற்றுகள் முடிந்த போதும் கூட 169 கோடி மட்டுமே உயர்ந்து 1,49,623 கோடியாக நிற்கிறது.
“ இன்று ஏலம் முடிய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அக்டோபர் – நவம்பரில் இந்தியாவில் 5ஜி நடைமுறைக்கு வர வாய்ப்பு இருப்பதாக கணிப்பு நிலவி வருகிறது “