இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம் காந்தியா? இல்லை நேதாஜியா?
ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம் வரும் போதெல்லாம் ஒரு பக்கம் சுதந்திரத்திற்கு காரணம் காந்தி என்றும், இன்னொரு பக்கம் நேதாஜி என்றும் அடித்துக் கொண்டு இருப்பார்கள் உண்மையான காரணம் யார் என்று பார்க்கலாம்.
இந்தியா முழுக்க காந்தி, நேதாஜி தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று ஆங்கில அரசுக்கு அழுத்தம் கொடுத்தது என்னவோ உண்மை தான். ஆனால் ஆங்கிலேயர்கள் ஒன்றும் சுதந்திரத்தை தூக்கி கொடுக்க அவ்வளவு இரக்கமானவர்கள் எல்லாம் இல்லை. உலகம் முழுக்க இருந்த ஏகாதிபத்திய ஆட்சிக்கான எதிர்ப்பும், இங்கிலாந்தின் அப்போதைய பிரதமர் கிளைமண்ட் ரிச்சர்டு அட்லி ஏகாதிபத்திய ஆட்சியின் எதிர்ப்பாளர் என்பதும் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
“ சுதந்திரத்திற்காக உயிர் நீத்த அத்துணை போராட்ட குண ஜீவன்களையும் இந்த நாளில் நினைவு கூறுவோம், இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் “