19 ஆண்டுகளுக்கு பின் உலக தடகளத்தில் இந்தியாவிற்கு பதக்கம், சாதித்த நீரஜ்!
Neeraj Chopra Won Silver In World Athletics Championship
அமெர்க்காவில் நடைபெற்ற உலக தடகளபோட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் பதக்கத்தை பெற்றுக் கொடுத்து இருக்கிறார் நீரஜ் சோப்ரா.
உலக தடகள போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவில் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள போட்டியில் இந்தியாவிற்கு 19 வருடங்களுக்கு பிறகு ஒரு பதக்கம் கிடைத்து இருக்கிறது. பதக்க பட்டியலின் ஒரு வெள்ளியுடன் இந்தியா 28 ஆவது இடத்தில் இருக்கிறது.
“ சூழல்,எதிர்க்காற்று இவை என்னை சற்றே வதைத்தது. இன்று வெள்ளி மட்டும் தான், வெகுவிரைவில் இன்றைய வெள்ளை பதக்கம் மஞ்சள் நிறமாக மாறும் என்று பதக்கம் குறித்து நீரஜ் சோப்ரா கூறி இருக்கிறார் “