50 வருட காலமாக எரிந்து வந்த அமர் ஜவான் ஜோதி அணைந்தது!
பாகிஸ்தானுடனான போரில் மரித்த வீரர்களின் நினைவாக 50 வருட காலமாக எரிந்து வந்த அமர்ஜவான் ஜோதி ஒன்றிய அரசால் அணைக்கப்பட்டது.
1972-இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் மரித்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக, 50 வருட காலமாக எரிந்து வந்த அமர்ஜவான் ஜோதியை அணைத்து, இந்தியா தேசிய வார் மெமோரியல் ஜோதியுடன் இணைத்து இருக்கிறது ஒன்றிய அரசு. இதற்கு பலதரப்பட்ட மக்களும் சமூக வலை தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
“ 50 வருட கால ஜோதியை அணைத்து, புதியதாக கட்டிய தேசிய வார் மெமோரியல் ஜோதியுடன் இணைத்திருப்பது தேசத்தின் தியாகத்தினை அவமதிப்பதாக அமைகிறது “