8 வயதில் மூன்று கொடூர கொலைகளை செய்த, சிறுவன் அமர்ஜீத் சதா பற்றி உங்களுக்கு தெரியுமா?
பீகாரில் 8 வயதில் மூன்று கொடூர கொலைகளை செய்த, சிறுவன் அமர்ஜீத் சதா என்ற சீரியல் கில்லர் பற்றி இங்கு பார்க்கலாம்.
யார் இந்த அமர்ஜீத் சதா?
பீகார் மாநிலம், முஸாஹரி என்ற கிராமத்தில் 1998 காலக்கட்டத்தில் பிறந்தவர் தான் இந்த அமர்ஜீத் சதா. ஏழை குடும்பம், தினசரி கூலி, அப்பா, அம்மா என இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம், அதனால் அமர்ஜீத் சுதந்திரமாக தெருக்களில் சுத்தி விளையாடிக் கொண்டிருந்தான்.
எப்படி கொலைகள் அரங்கேறியது?
2006, அமர்ஜீத் சதாவிற்கு வயது 8, அவர்களின் அத்தை ஒருவர் வேலை நிமித்தமாக அவரது குழந்தை ஒன்றை அமர்ஜீத்தின் வீட்டில் விட்டு செல்கிறார். வீட்டில் யாரும் இல்லாத சமயம் அமர்ஜீத்தும், அந்த குழந்தையும் மட்டும் இருந்து இருக்கின்றனர். அப்போது அமர்ஜீத் அந்த குழந்தையை அடிப்பது, கிள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கிறான். அந்த குழந்தையும் பயங்கரமாக அழுது இருக்கிறது. அந்த குழந்தை அழுவதை அமர்ஜீத் ரசித்து இருக்கிறான், ஒரு கட்டத்தில் குழந்தையின் கழுத்தை அவன் கைகளோடு நெறித்து அந்த குழந்தையின் மூச்சை நிறுத்தி இருக்கிறான். பின்னர் அந்த குழந்தை அப்படியே சரிந்து தரையில் விழுந்து இருக்கிறது.
பின்னர் அந்த குழந்தையை அப்படியே எடுத்து தோட்டத்தில் வீசி இருக்கிறான்.
திரும்பி வந்த அமர்ஜீத்தின் அம்மா, அத்தையின் குழந்தை எங்கே என அமர்ஜீத்திடம் கேட்ட போது, குழந்தைதனத்தோடு நடந்ததை கூறி இருக்கிறான். அதிர்ச்சியுற்ற அமர்ஜீத்தின் அம்மா, அழுது கொண்டே அமர்ஜீத்தை அடித்து விட்டு, பின்னர் நடந்த விடயங்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக, அமர்ஜீத்தின் அத்தையிடம் மறைத்து இருக்கிறார். அமர்ஜீத்தின் அத்தையும், அமர்ஜீத்தின் அம்மா கூறிய பொய்களை எல்லாம் நம்பி இருக்கிறார். பின்னர் அந்த குழந்தையின் இறப்பும் நாளடைவில் மறந்து போக குடும்பத்தில் அதற்கு பின்னர் அந்த குழந்தையை பற்றி யாரும் பேசவில்லை.
இரண்டாவது கொலை
முதல் கொலை நடந்த சில நாட்களுக்கு பின், ஒரு நாள் அமர்ஜீத், அவனது தங்கை மற்றும் பெற்றோர்கள் உடன் இரவில் உறங்கிக் கொண்டு இருந்தான். தங்கை தூங்கிக் கொண்டு இருக்கும் போது, மெல்லமாக அவளின் அருகில் வந்த கழுத்தை நெறித்து கொன்று இருக்கிறான். கொன்றது மட்டும் இல்லாமல் ஏற்கனவே வீசிய அதே தோட்டத்தில் தன் தங்கையையும் வீசி இருக்கிறார். இதனை அறிந்த அமர்ஜீத் அவர்களின் பெற்றோர் இந்த கொலையையும் சமூகத்தில் இருந்து மறைத்து இருக்கின்றனர்.
அமர்ஜீத் எப்படி மாட்டிக் கொண்டான்?
2007, அமர்ஜீத் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் தான் சூன்சூன் தேவி, இவருக்கு ஒரு 6 மாத மகள் இருந்து இருக்கிறாள். அவளை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு தேவி வெளியில் ஒரு வேலையாக சென்று இருக்கிறார். வந்து பார்த்தால் குழந்தையை காணவில்லை. ஆங்காங்கே தேடிய போது அமர்ஜீத் கையில் செங்கலை வைத்துக் கொண்டு அந்த குழந்தையை தாக்குவதை பார்த்து இருக்கிறார். குழந்தை அந்த இடத்திலேயே துடி துடித்து இறந்து இருக்கிறது. தேவி அதற்கு பின்னர் போலீஸ்சை அழைத்து நடந்ததை கூறி இருக்கிறார்.
விசாரணை
நடந்த சம்பவங்கள், 3 கொலைகள் என எதையும் காவல்துறையால் நம்ப முடியவில்லை. காரணம் அமர்ஜீத் 8 வயதே நிரம்பிய சின்னஞ்சிறு சிறுவன், அவர்கள் அவனை பிடித்து வந்து விசாரிக்கும் போது சிரித்துக் கொண்டே இருந்து இருக்கிறான். ஒரு கட்டத்தில் பிஸ்கட்டை கேட்டு வாங்கி விட்டு நடந்தனவற்றை அவனே ஒப்புக் கொண்டும் இருக்கிறான். இப்படி ஒரு குழந்தை மனதில் எப்படி கொலை செய்யும் எண்ணம் வந்து இருக்கும் என்ற கேள்வி தான் விசாரணையில் இருந்த காவல்துறை அதிகாரி அத்துனை பேரின் மனதில் எழுந்த கேள்வி.
தண்டனை
அமர்ஜீத் சிறுவன் என்பதால் அவனுக்கு மரண தண்டனையோ, சிறை தண்டனையோ கொடுக்க முடியாது. அதனால் அமர்ஜீத்,18 வயது நிரம்பும் வரை சிறுவர் நல இல்லத்தில் வைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அவனை மருத்துவ ரீதியாக பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவனின் உள்ளமும், மனமும் வெகுவாக பாதிக்கப்பட்டு ஒரு சேடிஸ்ட் போல அவன் இருப்பது தெரிய வந்தது. அதற்கு பின்னர் சிறுவர் நல இல்லத்திலேயே அவனுக்கு மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.
” 18 வயது நிரம்பிய பின்னர், அமர்ஜீத் புதிய பெயரில், புதியதொரு அடையாளத்துடன் சிறுவர் நல இல்லத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டு இருக்கிறான். தற்போது 2024, அவனுக்கு வயது 26 இருக்கும் எங்கு இருக்கிறான், எப்படி இருக்கிறான் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை, அரசும் அதை பாதுகாக்கிறது “