நம்பகத்தன்மையை இழக்கிறதா இந்திய செய்தி சேனல்கள்?
இந்திய செய்தி சேனல்கள் பெரும்பாலும் உண்மைகள் இல்லாத செய்திகளை பரப்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்து இருக்கிறது.
உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புதல், உண்மைக்கு புறம்பான கருத்துக்கணிப்புகளை நடத்துதல், பொய்யான தகவல்களை பகிர்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பிரபல நிறுவனம் ஒன்று உலகளாவிய அளவில் நடத்திய ஆய்வில், இந்திய செய்தி ஊடகங்களின் நம்பகத்தன்மையின் தரம் 166 ஆவது இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ பெரும்பாலும் செய்திகளில் வருவன அனைத்தும் உண்மை என நம்பிக் கொண்டு இருக்கும் இந்திய மக்களுக்கு இந்த ஆய்வின் முடிவு அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்து இருக்கிறது “