முப்படை தளபதியை சுமந்து சென்ற ஹெலிகாப்டர் ஊட்டி அருகே விபத்துக்கு உள்ளானது!
Army Helicopter Carrying Chief of Defence Staff Bipin Rawat Crashed Near Ootty
இந்திய முப்படையின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேரை சுமந்து சென்ற ஹெலிகாப்டர், ஊட்டி அருகே விபத்துக்கு உள்ளானது.
முப்படையின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட பதிநான்கு பேரை சுமந்து சென்ற ஹெலிகாப்டர் ஊட்டி, குன்னூர் அருகே விபத்துக்கு உள்ளானது. பற்றி எரியும் தீயில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தளபதி பிபின் ராவத்தின் நிலை குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.
“ பாதுகாப்பு துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது நாட்டிலேயே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது “