4 வயது மகனை கொன்ற தாய்? உண்மையில் நடந்தது என்ன?
பெங்களுரைச் சேர்ந்த சுசனா சேத் தனது நான்கு வயது மகனை கொன்றதாக பரவும் செய்தி நாட்டையே கதிகலங்க வைத்து இருக்கிறது.
சுசனா சேத் கொல்கத்தாவை சேர்ந்தவர், பெங்களுருவை மையமாக கொண்டு இயங்கும், மைண்ட்புல் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர். இவரும் தமிழகத்தை சேர்ந்த வெங்கட ரமணா என்பவரும் கடந்த 2010-யில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் 2020-யில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பெங்களுரு குடும்ப நல நீதிமன்றத்தின் உதவியுடன் அதிகாரப்பூர்வமாக பிரிந்தனர். குழந்தையை சந்திக்க வெங்கட ரமணாவிற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.
இந்த நிலையில் குழந்தை அடிக்கடி அப்பா வெங்கட ரமணாவிடம் அடிக்கடி வீடியோ காலில் பேசுவதை வழக்கமாக வைத்து இருந்து இருக்கிறது. இது சுசனா சேத் அவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை போல. ஆயினும் வெங்கட ரமாணா கால் பண்ணுகிற போதெல்லாம் குழந்தை எடுத்து பேசி இருக்கிறது. இந்த மனக்குமுறல்களை மனதிலேயே வைத்துக் கொண்டு இருந்த சுசனா சேத், ஒருகட்டத்திற்கு பின்னர் கோவாவிற்கு டூர் செல்வது போல சென்று அங்கு ஒரு தனியார் விடுதியில் வைத்து குழந்தையை துன்புறுத்தி கொன்றதாக கூறுகின்றனர்.
அதற்கு பின்னர் இறந்து போன குழந்தையை ஒரு சூட்கேஸ்சில் வைத்து, வாடகை காரில் பெங்களுரு செல்ல முற்பட்டு இருக்கிறார். விடுதியை விட்டு சுசனா சேத் செல்லும் போது, விடுதியாளர்கள் அறையை சுத்தம் செய்ய முற்பட்டு இருக்கின்றனர். அறை முழுக்க ஆங்காங்கே ரத்தக்கறைகள் தென்பட்டதால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர் போலீஸ்சுக்கு உடனடியாக தகவல் அளித்து இருக்கின்றனர். காவல்துறையும் விரைந்து செயல்பட்டு விடுதி உரிமையாளர் மற்றும் அந்த வாடகை வாகன ஓட்டுநர் உதவியுடன் சுசனா சேத் அவர்களை லாவகமாக பிடித்து விசாரித்து வருகின்றனர். வெகுவிரைவில் நடந்தது என்ன என்பது குறித்து முழுமையான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ நான்கு வயது பச்சிளங் குழந்தையை, பெற்ற தாயே கொன்றதாக பரவி வரும் செய்தி தேசம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது “