அடுத்த ஒரு மாதத்திற்குள் BF7 வேரியன்ட் இந்தியாவிலும் வேகம் எடுக்கும் – சுகாதாரத்துறை
Corona Virus BF7 Variant Will Spread Fast Ind Next 30 Days
அடுத்த்த ஒரு மாதத்திற்குள் BF7 வேரியன்ட் இந்தியாவில் வேகமெடுக்கும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது.
அதிவேகமாக பரவக்கூடிய திறன் கொண்ட கொரோனா வைரஸ்சின் BF7 உருமாற்றம் இந்தியாவில் அடுத்த 30 நாட்களுக்குள் வேகம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டுவரலாமா என்ற சிந்திப்பிலும் அமைச்சகம் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இந்த பண்டிகை காலங்கள் மிக முக்கியமான காலங்களாக அறியப்படுகிறது. மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அங்குமிங்குமாய் கூடாமல் இருந்தாலே கட்டுக்குள் கொண்டு வர முடியும் என மருத்துவ வல்லுநர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து இருக்கின்றனர் “