Canara Heal | ‘டிஜிட்டல் முறையில் மருத்துவ கடனுதவி, கனரா வங்கி அறிமுகப்படுத்திய புதிய திட்டம்’
’கனரா ஹீல்’ என்ற பெயரில் டிஜிட்டல் முறையில் மருத்துவ செலவுக்கான கடன் உதவியை பெறும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது கனரா வங்கி.
நோய்க்காக அவசரகதியில் ஒரு சிலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் போது சில நேரங்களில் மருத்துவ காப்பீட்டை மிஞ்சிய பில் வந்து விடுகிறது. இதனால் கடைசி நேரத்தில் நோயாளியின் உறவினர்கள் பணத்தை பிரட்ட அங்கும் இங்கும் திரிந்து அல்லாடும் நிலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கனரா வங்கி ’கனரா ஹீல்’ என்ற என்ற திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
‘கனரா ஹீல்’ என்பது என்ன?
அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஒருவரின் காப்பீட்டு தொகை முடிந்து எக்சஸ்சான பில் வந்து விடின், கனரா வங்கி வாடிக்கையாளர்கள் நேரடியாக கனரா ஹீல் திட்டத்தின் மூலம், முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் கடனுதவி கோரலாம். தற்போதைக்கு 5 இலட்சங்கள் வரை இத்திட்டத்தின் கீழ் கடனுதவி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுமாம், வாடிக்கையாளர்கள் கிளைகளை அணுக வேண்டிய அவசியம் இல்லை, அனைத்தும் டிஜிட்டல் முறையில் பரிசீலனை செய்யப்படும் எனவும் கனரா வங்கி தெரிவித்து இருக்கிறது. கடனை திருப்பி செலுத்துவதற்கு 36 மாதங்கள் அவகாசங்களும் கொடுக்கப்படுவதாக கூடுதல் தகவல்.
“ மேலோட்டமாக பார்க்கும் போது இது ஒரு நல்ல திட்டமாக தான் தெரிகிறது. திட்டங்கள் குறித்த நிபந்தனைகளை நேரடியாக வங்கி சென்று வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம், நோயாளிகள் கடைசி நிமிடங்களில் சிரமமின்றி டிஸ்சார்ஜ் ஆக இத்திட்டம் வழி வகுக்கும் “