காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு கொரோனோ தொற்று உறுதி!
Senior Congress Leader Sonia Gandhi Tested Corona Positive
காங்கிரஸ்சின் மூத்த தலைவராக அறியப்படும் சோனியா காந்தி அவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.
2019 முதல் இந்தியாவில் பெருக்கமெடுத்த கொரோனோ அலை இன்னமும் ஓயாத பாடாக தான் இருக்கிறது. இன்றளவும் அதை முற்றிலும் ஒழிப்பதற்கான வழிகள் கண்டு கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் தான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் நலமுடன் இயல்பாக இருப்பதாகவும் கூடுதல் தகவல்.
“ சோனியா காந்தி அவர்கள் சீக்கிரம் நல்லபடியாக குணமுற்று இந்த தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதே இந்திய மக்களின் பிரார்த்தனையாக இருக்கும் “