குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பலி – பாதுகாப்பு துறை அமைச்சகம்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பலியானதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், பயணித்த 14 பேரில் 13 பேர் பலியானதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தீயில் கருகிய நிலையில் அனைவரும் மீட்கப்பட்டதால் மரபணு சோதனையின் மூலம் அவர்கள் யார் யார் என்று முடிவு செய்யப்படும் எனவும் அறிவித்து இருக்கிறது.
“ முப்படையின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 14 ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளாகி இருப்பது நாடு முழுக்க துயர அலையை எழுப்பி இருக்கிறது “