குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பைலட் வருண் சிங் வீர மரணம் அடைந்தார்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தனி ஒருவராக உயிருக்கு போராடி வந்த பைலட் வருண் சிங் வீர மரணம் அடைந்தார்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட13 பேர் உயிரிழந்த நிலையில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் அதி தீவிர காயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் வீரமரணம் அடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
“ அதி தீவிர காயங்களுடன் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த குரூப் கேப்டன் வருண் சிங் எப்படியேனும் பிழைத்து விடுவார் என்று நம்பிக் கொண்டு இருந்த தேசத்தின் மக்களுக்கு அந்த வீரன் பிரியா விடை கொடுத்து வீர மரணத்தை தழுவி இருக்கிறான் “