பெருகிவரும் BF7 வேரியன்ட், தமிழகத்தில் கட்டாயம் ஆக்கப்படுமா முககவசம்?
Corona BF 7 Variant Idamporul
உலகம் முழுக்க BF7 வேரியன்ட் பெருக்கமெடுத்து வருவதால் தமிழகத்தில் முககவசம் மீண்டும் கட்டாயம் ஆக்கப்படுவது குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2019-யில் ஆரம்பித்த கொரோனா இன்னும் ஓயாத நிலையில், உலக நாடுகள் முழுக்க BF7 என்ற புதிய கொரோனா வேரியன்ட் கிளம்பி இருக்கிறது. இந்தியாவிலும் ஒரு சிலருக்கு BF7 தொற்று கண்டறியப்பட்டு இருக்கும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக முககவசத்தை மீண்டும் கட்டாயமாக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
“ உலக நாடுகள் தடுப்பூசிகளை மும்முரப்படுத்தினாலும் கூட, அது ஒவ்வொரு வேரியன்டாக மாறி மாறி மீண்டும் மீண்டும் தடுப்பூசிகளுக்கு எதிராக உருமாற்றத்தை மேற்கொண்டு வருகிறது “