கடந்த 24 மணி நேரத்தில் தேசத்தில் 636 புதிய கொரோனோ தொற்றுகள் பதிவு!
Corona Update 636 New Cases Reported In Last 24 Hours 01 01 2024
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 636 புதிய கொரோனோ தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய கோவிட் 19 ஜே என் 1 சப் வேரியண்ட் அதிவேகமாக தேசமெங்கும் பரவி வரும் நிலையில், இந்தியா முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 636 புதிய கோவிட் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஒட்டு மொத்த கொரோனோ தொற்று ஆனது இந்தியாவில் 4,394 ஆக அதிகரித்து இருக்கிறது.
“ அதிகபட்சமாக கர்நாடகா மற்றும் மஹாராஸ்டிராவில் மட்டும் கடந்த வாரங்களில் தலா 922 மற்றும் 620 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது “