கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 534 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,82,551 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 15,389 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடியை நெருங்கி இருக்கிறது. மீட்பு விகிதம் சற்றே குறைந்து 98.01 சதவிகிதமாக இருக்கிறது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2,14,004 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ கடந்த நான்கு நாட்களில் மீண்டும் தொற்றின் விகிதம் பன்மடங்காக உயர்ந்து இருப்பதால் மூன்றாவது அலை இந்தியாவில் ஆரம்பித்து விட்டதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “

About Author