கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1.07 லட்சம் புதிய கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 06 02 2022

Corona Updates In India 06 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1.07 லட்சம் புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,07,474 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 865 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,01,979 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ உலகளாவிய அளவிலும் சரி, தேசத்திலும் சரி படிப்படியாக கொரோனா தொற்று குறைந்த வண்ணம் இருக்கிறது. மூன்றாவது அலையின் முடிவாக இருக்கலாம். நான்காவது அலையின் தொடர்ச்சியாகவும் இது இருக்கலாம் “

About Author