கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 6,050 புதிய கொரோனா தொற்றுகள்!
India Reports 6050 New Covid Cases In Single Day 07 04 23 Idamporul
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 6,050 புதிய கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,050 புதிய கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது இந்த ஆண்டில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா தொற்று ஆகும். இது இன்னும் அதிகரிக்குமேயானால் கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று மக்களிடையே மீண்டும் பீதியை கிளப்பி இருக்கிறது. யாரும் பயப்பட தேவையில்லை பெரும்பாலானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் “