கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் இரண்டு லட்சத்தை நெருங்குகிறது தினசரி கொரோனா பாதிப்பு’

Corona Updates In India 12 01 2022

Corona Updates In India 12 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,94,720 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,94,720 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 165 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,84,378 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

“ மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்புகள் இல்லை என பெரும்பாலான மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. டெல்டாவால் ஏற்பட்ட பெரும்பாதிப்பை விட ஒமிக்ரான் பாதிப்பு சிறு புள்ளி அளவே என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “

About Author