கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,774 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,774 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 306 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,75,434 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8,464 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 133 கோடியை நெருங்கி இருக்கிறது. ஒரு சிலர், ஒரு தவணை மட்டும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். ஒரு சிலர் இரண்டு தவணையும் எடுத்துக் கொண்டுள்ளனர். ஆக மொத்தம் 133 கோடி தடுப்பூசி மக்களிடையே உபயோகிக்கப்பட்டு இருக்கிறது.

“ ஒமிக்ரான் பரவி வரும் இந்த சூழலில், இன்னமும் பல்வேறு மாநிலங்களில் டெல்டா வகை கொரோனோ வைரஸ்சே சமூக பரவலாகத்தான் திரிவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. ஆதலால் எல்லாம் முடிந்து விட்டது என்று முகக்கவசத்தை தூக்கி எறிந்து விட வேண்டாம் எனவும் எச்சரித்து உள்ளது “

About Author