இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 10,158 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!
Corona Updates In India 13 04 23 Idamporul
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,158 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 10,158 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது ஆகஸ்ட் 2022-ற்கு அப்புறம் பதிவான அதிகபட்ச தொற்றின் அளவு ஆகும். இது போக தொற்றிற்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 19 பேர் பலியாகியும் இருக்கின்றனர்.
“ தேசத்தில் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தற்போது 5,31,005 ஆக இருக்கிறது, பெரிதளவில் பாதிப்புகள் இல்லையென்றாலும் கூட மூன்று வருடங்கள் ஆகியும் இன்னும் கொரோனாவிற்கு எதிராக போராடும் சூழலில் தான் இருக்கிறோம் என்பது வருத்தத்திற்குரியது “