இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!
Corona Updates In India 15 04 23 Idamporul
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,753 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 10,753 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தற்போது கொரோனாவிற்காக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தேசத்தில் 53,720 பேராக உயர்ந்து இருக்கிறது.
“ மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக இருக்கிறது. ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் தற்போது 5,31,091 ஆக உயர்ந்து இருக்கிறது “