கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,974 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,974 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 343 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 4,76,478 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,948 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 136 கோடி என்ற இலக்கை அடைந்து இருக்கிறது. நாட்டில் 63.2 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

“ வைரஸ்சின் உருமாறும் செயல்பாடுகள் குறையவேண்டுமெனில் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. ஆதலால் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை முன்வந்து எடுத்துக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்து இருக்கிறது “

About Author