கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா தொற்று’
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று 10,000-ற்கும் கீழ் குறைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு ஆனது இந்தியாவில் பத்து ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து இருக்கிறது. இருந்தாலும் கூட இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் அனைவரையும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வது நல்லது என சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.
“ கொரோனா சூழல் மெல்ல மெல்ல கரைந்து வருகிறது. 0 என்னும் சதவிகிதத்தை தொட வேண்டும் என்பதே சுகாதரத்துறையின் அடுத்த இலக்காக இருக்கிறது “