கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.82 லட்சம் புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 19 01 2022

Corona Updates In India 19 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 2.82 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,82,970 கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 441 பேர் தேசத்தில் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,87,202 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ தற்போது வரை தேசத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 18,31,000 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author